Saturday, March 26, 2011

சுப்புலட்சுமியும், அவள் மூக்கும்

எங்கள் வகுப்பில் ஆண்கள் 26 பேர், பெண்கள் 18 பேர் , பள்ளியின் எல்லா வகுப்பிலும் பெண்கள் குறைவாகத்தான் படித்துக் கொண்டிருந்தனர் அப்போது. அந்த 18 பேரில் 10 பேர் மட்டுமே ஆண்களின் கவனத்துக்குரியவர்கள். ஏனென்றால், அவர்கள் அழகு நிறைந்தவர்கள். அதில் நான்கு பேர் சிவந்த நிறமுடையவர்கள்.சிவப்புத்தோல்தான் அழகு என்று யார் போதித்தார்கள்?, எதனால் வந்தது?, எப்படி? என்ற கேள்விகளெல்லாம் அப்போது எங்களுக்கு தெரியாது. படிப்பில் கூட சிறந்தவர்களாய் இருந்தார்கள்.தேர்வில் முதலிடம் பிடிப்பவர்களுக்குதான் "லீடர் " பதவி.அதற்காக மாணவ மாணவியர்க்கு போட்டியே நடக்கும் . ஆண்,பெண் என்ற அகங்காரம் அந்த வயதிலே ஆரம்பித்து விட்டது.ஆண் லீடராகி விட்டால் ஆசிரியர் இல்லாத போது பெண்களின் அத்தனை பேர் பெயரும் தண்டனைக்குரியவர்கள் பட்டியலில் போர்டில் இருக்கும்.பெண் லீடரானாலும் அதே.

எங்களுக்கு வரலாறு புவியியல்(தற்போது சமூக அறிவியல்) பாடம் நடத்துவதற்கு "சாலமன் " என்ற ஆசிரியர் வருவார்.அடர் கருப்பு நிறம் கொண்டவர்.வெண்மை நிற தலை முடியும்,மீசையும் உடையவர் .அவர் உடுத்தும் வேட்டி, சட்டையை விட அது வெளுப்பாக இருக்கும் .குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சினிமாவில் வரும் "பெரிய கறுப்புத் தேவர்" என்ற நடிகரை சொல்லலாம். அவர் என்னவிதமான குணம் கொண்டவர் என்று கண்டுபிடிக்க முடியாது. ஒருநாள் சீறுவார்,ஒருநாள் மகிழ்ச்சியாக பேசுவார், ஒருநாள் அமைதியாக பாடம் நடத்துவார். வகுப்பில் கேள்விகள் கேட்கும் போது பெண்கள் பகுதியில் மட்டுமே கேட்பார்.தண்டனைகளும் அவர்களுக்கு மட்டும்தான்.

அந்த அழகுப் பெண்கள் மத்தியில் சுப்புலட்சுமி என்ற பெண் தனித்து தெரியும். கிளி போன்ற வளைந்த மூக்கே அவளின் அழகை தனித்து காட்டும் .படிப்பிலும் கெட்டி எனக்கு அவளை மிகவும் பிடிக்கும்.சந்தேகம் என்ற பெயரில் நான் அவளிடம் நட்பாக இருக்க முயற்சித்ததுண்டு . ஆசிரியரின் கேள்விகள் எப்போதும் முதலில் அவளை நோக்கியே செல்லும்.பதில் தவறாக இருந்தால் அவளின் மூக்கை பிடித்து திருகுவார். வலியில் துடிப்பாள். சரியான பதிலாக இருந்தாலும், அவள் மூக்கு செல்லமாக திருகப்படும். அப்போதும் வலியால் முனகுவாள்.சிவந்த அவள் மூக்கு மேலும் சிவக்கும் .எனக்கு கோபம் அதிகமாகும். என் மனதில் ஹீரோ ஒருவன் எழுந்து முஷ்டியை மடக்கி வாத்தியாரின் மூக்கை பார்த்து ரத்தம் வரும் வரை குத்துவான் .நிஜத்தில் நடத்த முடியாததெல்லாம் நடத்துவான். நான் ரசிக்கின்ற மூக்கு வாத்தியாருக்கு பிடிக்கவில்லையா? ஆனால்,பிடித்திருக்கிறது என்று சொல்லித்தான் திருகுவார். எனினும் ஏன் என்று தெரியவில்லை? .

பிறகு குடும்ப சூழலால் முழு வகுப்பும் படிக்க முடியாமல், வேறு ஊரில் படிக்க வேண்டியதாயிற்று . சில வருடங்கள் கழித்து உடன் படித்த நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். சுப்புலட்சுமியை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருந்தும் உள்ளே ஏதோ ஒன்று தடுத்தது. பின் வாத்தியாரைப் பற்றி விசாரித்தேன். அவன் சொன்னதும் அதிர்ந்தேன். ""சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது ரத்த அழுத்தத்தால் தலை சுற்றி கீழே விழுந்து இறந்து போனார் . மூக்கில் அடிபட்டு "






நண்பர்களே என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள். நன்றி!
.
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

காதர் அலி said...

தலைவரே,அழகிபடம்மாதிரி நிறைய இளமை நினைவுகளை மனதில் வைத்து இருக்கிறிர்கள்.உங்கள்அனுபவம் போலவே என அனுபவமும் சுகமானது.அதை யாரிடமும் பகிரவில்லை.இருந்தும் உங்கள் வாத்தியாருக்கு இந்த முடிவா வர வேண்டும்.கவலைபடாதிர்கள் இந்த பதிவிற்கு நிறைய பின்னுட்டம் வரும்.இளமை பருவத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி .

உணவு உலகம் said...

இளமை நினைவுகள் இனிமையானவை.

Rathnavel Natarajan said...

உங்கள் எழுத்து பிடித்திருக்கிறது.
வாத்தியார் - கதையா? நிஜமா?

உணவு உலகம் said...

என்ன நண்பரே, ஏன் தமிழ்-10 மற்றும் தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறீர்கள்?

Chitra said...

நான் ரசிக்கின்ற மூக்கு வாத்தியாருக்கு பிடிக்கவில்லையா? ஆனால்,பிடித்திருக்கிறது என்று சொல்லித்தான் திருகுவார். எனினும் ஏன் என்று தெரியவில்லை? .


...... ம்ம்ம்ம்ம்ம்ம்........ இது ஒரு வகை abuse தான். சகஜமாக எடுத்துக் கொள்ள பழகி விட்டோமே. :-(

மைதீன் said...

@நன்றி காதர்

மைதீன் said...

@நன்றி food
ஆமாம் இனிமையானவைதான்.

மைதீன் said...

@நன்றிரத்தினவேல்ஐயா.
நிஜம்தான்.கதையை விட நிஜம் சில சமயங்களில் ஆச்சர்யம் தரும்.

மைதீன் said...

வருகைக்கு நன்றி சகோ. சித்ரா

மைதீன் said...

"FOOD said...
என்ன நண்பரே, ஏன் தமிழ்-10 மற்றும் தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறீர்கள்?"


கொடுத்திருக்கிறேன் .ஏன் ஒட்டுப்பட்டை வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லை.

geethappriyan said...

நல்ல பகிர்வு நண்பா

நிலாமதி said...

கதை நிஜமா . தங்கள் பகிர்வுக்கு நன்றி .அவள் இட்ட சாபம்போலும் ஹீ ஹீ .

மைதீன் said...

@நன்றி காரத்திகேயன்

@முதல் வருகைக்கு நன்றி நிலாமதி.

CS. Mohan Kumar said...

சிறு வயது நினைவுகள்... நம் மனதில் பதிந்து விடுகின்றன.

உலக சினிமா ரசிகன் said...

உங்கள் என் கனகராணியை ஞாபகப்படுத்தியது[எங்கிருக்கிறாளோ?].நன்றி நண்பரே!

மைதீன் said...

@வருகைக்கு நன்றி மோகன் குமார் @நன்றி உலக சினிமா ரசிகன்

Related Posts Plugin for WordPress, Blogger...