Sunday, March 13, 2011

ஆசிரியரின் வினோதமான பழக்கம்

நான் ஆறாம் வகுப்பு பாளையங்கோட்டையில் உள்ள c.m.s. மேரி ஆர்டன் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். அந்த ஒரு வகுப்பு மட்டுமே அங்கு படிக்க நேர்ந்தது.ஆண்,பெண் இரு பாலரும் படிக்கும் பள்ளியது.எங்கள் வகுப்பாசிரியர் ஒரு கிறிஸ்துவ பெண்மணி. கிறிஸ்துவிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். எங்களுக்கு பைபிளை அதிகமாக போதித்து அதன் படி வாழ கற்றுக்கொடுப்பார்.இன்னும் சொல்லப்போனால், "வேத பாடம்" என்றொரு வகுப்பும், அதற்க்கு தேர்வும், மதிப்பெண்களும் கூட அந்தப்பள்ளியில் உண்டு.அங்கு படித்த நாட்களில் நான் ஒரு கிறிஸ்தவனாகவே வாழ்ந்தேன் என்று கூட சொல்லலாம்.நான் மட்டுமின்றி நண்ப, நண்பிகளும் கூட அப்படித்தான் வாழ்ந்ததாக எனக்கு நினைவு.

அவர் எங்களுக்கு அடிக்கடி தேர்வுகள் வைப்பார். பள்ளி தரும் தர அட்டைகளை(rank card)கூட அவர்தான் நிர்வகிப்பார். மாணவர்களை தரம் பிரிப்பதில் அவர் ஒரு முறை ஒன்று வைத்திருந்தார். நான் அறிந்தவரை எல்லா பள்ளிகளிலும் மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களின் தரம் பிரிக்கப் படும். ஆனால்,இந்த ஆசிரியரின் பார்வை மாறுபட்டு இருக்கும். ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களையே முன்னிருத்துவார்.

உதாரணமாக, நான் நான்கு பாடங்களில் 200 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்களும் சேர்த்து 240 வாங்கியிருந்தேன். ஆனால், என் நண்பன் நான்கு பாடங்களில் 240 ஆங்கிலத்தில் 35 என்று மொத்தம் 275 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். எனக்கு ஏழாம் இடமும், அவனுக்கு பதினோராம் இடமும் தரமாக நிர்ணயித்து இருந்தார். எனக்கு இது விநோதமாக பட்டாலும் ( பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது) இங்கு அப்படித்தான் போல என்று நினைத்துவிட்டேன். ஆனால், இன்று வரை எந்தப் பள்ளியிலும் அப்படி ஒரு முறை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏன் அந்த ஆசிரியர் மட்டும் அப்படி? அந்த ஆசிரியரை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? வேறு யாரும் இதுபோல உண்டா? என்கிற என் கேள்விக்கு இன்று வரை பதிலில்லை.

நண்பர்களே! இந்த நடைமுறை பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் எனக்கு விளக்குங்கள்.நன்றி!

டிஸ்கி: அந்தப் பள்ளியில் மற்ற வகுப்பில் அந்த பழக்கம் கிடையாது. நண்பன் என் எதிரில் அவர்கள் வீட்டில் அடி வாங்கினான்.
நண்பர்களே! என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Chitra said...

அந்த ஆசிரியரை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்?


.....அந்த ஆசிரியரிடம் பெற்றோர்கள் யாரும் விளக்கம் கேட்காமல் - முறையிடாமல் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை, எல்லோருமே ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், கண்டுகொள்ளாமல் இருந்து இருக்கலாம்.

சொல்லச் சொல்ல said...

//பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது//. ஹா, ஹா
நிர்வாகம் கண்டுபிடிக்காதது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
அக்காலத்திலேயே வெளிநாட்டில் வேலை பார்ப்போரின் நிலையை உணர்ந்த ஆசிரியை போல. மற்றப் பாடங்களில் என்னதான் expert ஆக இருந்தாலும் ஆங்கிலம் தெரியாவிட்டால் நம் ரேங்க் கீழ் தான் என்பதை சுட்டிக்காட்டவோ?

மைதீன் said...

@ தங்கள் வருகைக்கு நன்றி சித்ரா.
நீங்கள் கூறுவது போல் இருந்தாலும்,அவரைப் பார்ப்பவர்களோ,பேசுபவர்களோ அவர் வசம் இழப்பார்கள்.அவ்வளவு ஒரு கனிவு.என் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான ஆசிரியர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகு அந்தப் பள்ளியையோ, நண்பர்களையோ சந்திக்க கொடுத்து வைக்கவில்லை.

மைதீன் said...

@ சொல்ல சொல்ல தங்கள் முதல் வருகைக்கு நன்றி!
நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.நான் அங்கு படித்தது அந்த ஒரு வருடம் மட்டுமே.ஆனால்,அந்த ஆசிரியர் நெடுங்காலம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தவர்.அப்போதே அவருக்கு வயது ஐம்பதை தாண்டிஇருக்கும் . சின்ன வயதில் அதைப் பற்றிய தெளிவில்லை எனக்கு.

பதிவுலகில் பாபு said...

ம்ம்.. வித்தியாசமான டீச்சர்தாங்க..

மைதீன் said...

வருகைக்கு நன்றி பாபு

Related Posts Plugin for WordPress, Blogger...