Monday, January 25, 2010

மனதை உருக்கும் பாடல்

என் முதல் பதிப்பிற்கு நண்பர்களின் அத்துணை ஆதரவு நானே எதிர்பாராதது. அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் .


குடியரசுதின நல் வாழ்த்துக்கள்


மனிதவாழ்வில் மகிழ்ச்சி,பக்தி,துக்கம்,கவலை,இன்னும் பிற உணர்ச்சிமிக்க
தருணங்களுக்கு பாடல்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.


இதற்க்கு மொழிபேதமோ,மதபேதமோ,இனபேதமோ கிடையாது .மேலும் இவைகளை வளர்க்கவே பாடல்கள் உதவியிருக்கிறது.


நாம் அதிக பாடல்களை ரசித்தாலும் ,சில பாடல்கள் மட்டுமே மனதில் நீங்காதிடம் பெற்று விடுகிறது. [அதுவும் சூழல்களை பொறுத்து மட்டுமே!] எப்போது கேட்டாலும் சில உணர்வுகளை உந்திதள்ளும்.


அப்படி என் உணர்வுகளை தூண்டிய பாடல்களில் ஒன்று! மணிரத்னம் இயக்கத்தில் ,வைரமுத்துவின் வைரவரிகளில் ,நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த"கன்னத்தில் முத்தமிட்டால் "படத்தில் அவரே உணர்ச்சிமிக்க பாடிய "வெள்ளை பூக்கள்"என்ற பாடல்.


இந்த பாடலின் மெட்டு,அதன் வரிகள்,அந்தக்குரல், என் உயிரை உருக்கும் !
அந்த பாடல் முடியும்போது என் கண்களில் கண்ணீர் மிச்சமிருக்காது.


இந்த பாடல் திரைப்படத்தில் பின்புலமாகவே ஒலிக்கும், வசனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் .அதுவும்,இலங்கை தமிழால்.


இலங்கை தமிழ்தான் எத்தனை அழகு! எனக்கு மிகவும் பிடிக்கும் .


இந்த பாடலின் வரிகளில் "எங்கு சிறு குழந்தை தன கைகள் நீட்டிடுமோ? அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே! எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாதோ வெள்ளை குயிலே ..."


போர் முடிந்து விட்டது ஆனால்.......









இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள் நன்றி!!!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் -அழிவின் பதிவு


இந்த படத்தை நம் பதிவர்கள் அதிகம் அலசி ஆராய்ந்துவிட்டனர் . ஆனால் என் வேலை அதுவல்ல ,இந்த படம் அதிலுள்ள தமிழ் .

நம் தமிழ் எவ்வளவு வார்த்தைகளை இழந்து விட்டது [நாம் அழித்து சிதைத்து விட்டிருக்கிறோம் ] என்பதை உணரவைத்தது .இவையெல்லாம் நாம் ஏற்கெனெவே அறிந்தவைதான் என்றாலும் திரைப்படம் என்ற ஊடகத்தின் மூலம் அது இன்னும் உணர்வுபூர்வமாக சிந்திக்கசெய்கிறது .

தமிழ் என்ற வார்த்தைமட்டுமே இனி தமிழில் இருக்கும் என்ற நிலை வந்தாலும் ஆச்சிரியப்படுவதர்க்கில்லை.

எங்கள் வீட்டு குழந்தை தமிழில் 20 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசையில் பின் தங்கியது .வினவியபோது "தமிழ் மட்டும் இல்லையென்றால் நான் முதலிடத்தில் இருப்பேன் "என்ற பதிலில் தமிழனாகிய எனக்கு பூமி பிளந்தது .

இந்த அவசரயுகத்தில் பொருளாதார யுத்தத்தில் இதைப்பற்றி சிந்திக்கவே நமக்கு நேரமில்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை .

உலகம் முழுவதும் தமிழினம் மட்டுமே பரவியிருக்கிறது .தமிழ் மொழி கேள்விக்குறியோடு நிற்கிறது .


வேற்று மொழி தொலைக்காட்சிகளும் ,திரைப்படங்களும் ,தமிழ் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது , நம் நடிகர்களும் ,நடிகைகளும் ,தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் ,வேற்று மொழி கலந்து பேசும்போது,

நான் என்னத்த சொல்ல ...

இந்தவேளையில் திரைப்படங்களுக்கும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ,நடிக ,நடிகையர்க்கும்தான் தமிழ் மக்களிடம் அதீத ஈர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதும் இவைகள்தான் .


இதைபுரிந்துகொண்டு தமிழ் திரைப்படங்களும் ,தொலைக்காட்சிகளும் ,பத்த்ரிக்கைகளும் ,அதை சார்ந்த கலைஞர்களும், அவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுத்துகொண்டிருக்கும் தமிழை ,உண்மையான தமிழை சிதைக்காமல் இருந்தால் தமிழ் நீண்ட நெடும்காலம் வாழும் என்பது என் தாழ்மையான கருத்து .

முடிந்தால் தமிழ் அறிஞர்களின் உதவியுடன் தமிழின் அழிந்த சொற்களை மீட்டெடுத்து, மக்களிடம் அவர்கள் சேர்க்கவும் முடியும் .

இந்த உணர்வுகளை ஊட்டிய செல்வராகவனுக்கு என் நன்றி !!!

மேலும், ஆயிரத்தில் ஒருவனில் ,சில குறைகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய திரைப்படமே !
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...