Monday, October 18, 2010

man on fire-2004 விமர்சனம்பணத்துக்காக ஆட்கள் கடத்தும் கும்பல் உலகெங்கும் பரவிக்கிடக்கிறது.இது எப்பொழுது ஆரம்பித்தது,எங்கு ஆரம்பித்தது என்பதுதெரியவில்லை.ஆனால்,இன்று வரை கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது.ஒவ்வொரு மணிக்கும் ஏன்,ஒவ்வொரு நிமிடத்திற்கும் கூட உலகில் எங்காவது ஆட்கள் கடத்தப்பட்டுக்கொண்டுதானிருக்கிரார்கள். எல்லாமும் வெளியில் தெரிவதில்லை.அதேபோல் பணம் கொடுத்தாலும்,கடத்தப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. அப்படி கடத்தல் கும்பலுடன் கதாநாயகன் மோதும் adventure action படம்தான் man on fire-.இந்த படத்தை அநேகம் பேர் பார்த்திருந்தாலும் நான் நேத்துதான் பார்த்தேன்.அதை உங்களுடன் பகிர்கிறேன்.

man on fire- திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

mexico city யின் பணக்கார வியாபாரி samuel ramos[marc anthony] அவர் மனைவி lisa martin ramos[radha mitchel].இவர்களின் செல்ல மகள் lupitha martin ramos[dacotta fanning] செல்லமாக 'pita'. சாமுவேலின் ஒன்பது வயது மகளுக்கு பாதுகாப்பாக ஒரு பாதுகாவலர் வைத்துக்கொள்ளும்படி,அவரின் வக்கீல் அறிவுறுத்துகிறார்.ஏனென்றால்" மெக்ஸிகோ சிட்டி யில் " அதிகரித்துவரும் கடத்தல் கும்பலிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற. செக்யூரிட்டி தலைமை அதிகாரியாக இருக்கும்Paul Rayburn[christober walken] இடம் உதவி கோரும்போது அவர் முன்பு தன்னுடன் c.i.a வில் வேலை செய்த நண்பன் John Creasy[Denzel Washington] என்பவரை சிபாரிசு செய்கிறார்.கிரேசி நிழலுக தீவிரவாத கும்பலை ஒழிப்பதில் திறமை உள்ளவர்.தற்போது மன வெறுப்பினால் வேலையிலிருந்து விடுபட்டு, வேலையில்லாமல் இருப்பவர்.பழைய நினைவுகளை மறப்பதற்காக எப்போதும் மதுவை நாடுபவர்.
கிரேசிக்கு பாதுகாவலாராக இருப்பதில் விருப்பமில்லை ஆனால்,வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார்.சாமுவேலின் குடும்பத்தினர் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர் . பின்பு தனி அறைக்கு செல்கிறார் அவரால் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் மது அருந்திவிட்டு துப்பாக்கியால் தற்கொலைக்கு முயல்கிறார்.ஆனால் துப்பாக்கி வெடிக்காமல் அவருக்கு வாழ்க்கை கொடுக்கிறது. பின்பு 'பிதா' வுடன் பாதுகாவலராக தொடர்கிறார் குழந்தையின் கள்ளமில்லா பேச்சு அவர் மனதுக்கு மருந்திடுகிறது. 'பிதா'வுக்கு நீச்சல் பயிர்ச்சியாளராகி பள்ளி நீச்சல் போட்டியில் வெல்ல வைக்கிறார். பின்பு 'பிதா'வும் கிரேசியும் மிகவும் நெருக்கமாகி விடுகிறார்கள்.ஒரு நாள் பியானோ வகுப்புக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது பிதா வை இருவர் கடத்த வருகிறார்கள் பிதா வை காப்பாற்ற கிரேசி அவர்களுடன் துப்பாக்கியுடன் போராடுகிறார்.எனினும்,அவரை சுட்டுவிட்டு பிதா வை கடத்தி விடுகிறார்கள்.பத்திரிகை நிருபரான பெண் ஒருவர் உதவியுடன் குண்டு காயங்களுடன் பிதாவை கண்டுபிடிக்க கிளம்புகிறார்.அங்கு அவருக்கு நிறைய அதிர்ச்சி காத்துக்கொண்டிருப்பதை அறியாமல். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இத்திரைப்படம் A. J. Quinnell எழுதிய man on fire என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது .சாதாரண கதைதான் என்றாலும் திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றனர். இந்த மாதிரி பாத்திரத்துக்கு denzel washingdon மிகவும் பொருந்தி விடுகிறார். இந்தப்படத்தின் இயக்குனர் tony scott."gladiator" படம் இயக்கிய ridley scott தம்பி .இவர் இயக்கிய talking of belhalm 123 என்ற திரைப்படம் எனக்கு பிடித்த படம்.அதிலும் வாஷிங் டன் நடித்திருப்பார். ஆக்சன் வகை படங்களுக்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம் அதி திறம்பட செய்திருக்கிறார் paul cameron. ஹிந்தியில் இந்த கதையை கொண்டு அமிதாப் பச்சனை வைத்து 'ஏக் அஜ்னபி' என்ற படத்தை ரீமேக் செய்தார்கள். அஞ்சாதே படத்தில் கூட இந்த படத்தின் காட்சிகள் வரும் .

படத்தை பற்றிய மேலும் சில தகவல்.
Directed by Tony Scott
Produced by Lucas Foster
Arnon Milchan
Tony Scott
Written by Brian Helgeland
Starring Denzel Washington
Dakota Fanning
Christopher Walken
Giancarlo Giannini
Radha Mitchell
Marc Anthony
Rachel Ticotin
and Mickey Rourke
Music by Harry Gregson-Williams
Lisa Gerrard
Cinematography Paul Cameron
Editing by Christian Wagner
Studio Regency Enterprises
New Regency
Scott Free Productions
Distributed by 20th Century Fox
Release date(s) April 23, 2004 (2004-04-23)
Running time 146 minutes
Country United States
Language English
Budget $70 million
Gross revenue $130,293,714man on fire trailer


பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் தந்து என்னை உற்ச்சாகப்படுத்துங்கள்.நன்றி!!

சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...