Thursday, March 24, 2011

என்றுதான் விடியுமோ?

தமிழ்நாட்டில் மின்வெட்டு இரண்டுமணி நேரத்தில் இருந்து இப்போது 3 மணி நேரமாகிவிட்டது. இதில் அறிவிப்பில்லாமல் சிறிது சிறிதாக 2 மணிநேரம் மொத்தம் 5 மணி நேரங்கள் மின் வசதி இல்லை. கோடை ஆரம்பிக்கும்போதே இப்படியென்றால் இந்த முழு கோடையையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும் போல் தெரிகிறது. இதில் இரவு சிறிது நேரம் மின்வெட்டு ஆகிவிடுவதால் ரொம்பக் கொடுமை.குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது. தேர்தல் நேரமே இப்படியென்றால், தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின் மின்வெட்டு பிரச்சினை இன்னும் அதிகமாகுபோல் எனக்கு தோன்றுகிறது.

உணவு,உடை,உறைவிடம் போலவே மின்சாரம் மனிதனின் அத்தியாவசியம் ஆகிவிட்டது. இல்லாமல் முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் மின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாக வீடுகளும், தொழிற்சாலைகளும்,மின்சாதன கண்டுபிடிப்புகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. குடிசை முதற்கொண்டு எல்லா வீட்டிலும் அரிசி, பருப்பு இருக்கின்றதோ இல்லையோ மின்சாதனப் பெருட்கள் கட்டாயம் இடம் பெற்று இருக்கிறது .இதில் வீட்டில் இருக்கிற டி.வி. போதாதென்று அரசாங்கம் வேறு இலவசமாய் கொடுத்திருக்கிறது.

ஆளும் ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வை என்பதே கிடையாது போல் தெரிகிறது . தன குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை உத்தேசித்து முன்கூட்டியே முடிவெடுக்கும் தலைவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதே இல்லை. இலவசங்களை கொடுத்து செய்த தப்புகளை மறக்கடித்து விடலாம் என்று அசிங்கமான அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுகளுக்காக அவர்கள் நடத்தும் நாடங்கள் மிகுந்த கோபத்தை வரவழைக்கின்றன. கிரைண்டர்,மிக்சி, என எல்லா இலவசங்களும் மின்சாதனப் பொருட்கள் .ஆனால்,மின்சாரம் மட்டும் கிடையாது.

காமராஜர்,கக்கன், அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் மனசாட்சி படியும் மக்களின் நன் மதிப்பை பெற்றும் ஆட்சி செய்தார்கள் . பொதுவாக அரசுப் பணியில் இருப்பவர்கள்,மக்களின் பிரதிநிதிகள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர்கள் மதம்,இறைநம்பிக்கை எல்லாவற்றையும் பகிரங்கப் படுத்தக் கூடாது . மனதிற்குள் தான் வைக்கவேண்டும்.ஆனால் இங்கு சாமியார்களிடத்தில் ஓடுவதும், ஜாதி ஓட்டுக்களுக்காக ரௌடிகளை வளர்த்துவிடுவதும், மத தளங்களுக்கு சென்று அந்த சடங்குகளில் கலந்து கொள்வதும் அதை விளம்பரப் படுத்துவதும் என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்ப்படுத்துகிறார்கள்.மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்கள் என்று இப்போது யாரும் இல்லை.

"ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்" என்று கூறுகிறார் கலைஞர். கஜானாவைக் காலி பண்ணிக்கொண்டிருந்தால் ஏழைகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.பசித்த ஒருவனுக்கு உணவு அளித்து பெருமை தேடுவதை விட அடுத்த வேளை உணவுக்கும் அவனே தேடிக்கொள்ளுமளவு அவனை உருவாக்குபவனே சிறந்த மனிதன்.என்று எங்கோ படித்த நினைவு.



நண்பர்களே! என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

geethappriyan said...

நண்பரே,
மிகவும் சரி தான்.
இவர்கள் குடும்பமே ஒரு மின் வாரியம் அமைத்து அரசுக்கு மின்சாரம் விற்றால் என்ன கேடு ? புல்லட் ரயில் சென்னை டு கோவைக்கு விட ஆகும் செலவு வெறும் 14000கோடி தானாம் ,அந்த ஸ்பெக்ட்ரம் பணத்தில் இந்தியா முழுக்க புல்லட் ரயில் விடமுடியும் போலவே?இப்போ திமுகவுக்கு பயந்து அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் தீர்ந்தது,அவர் ஆட்சிக்கு வந்தால் இவர்களை கைது செய்வார்,வழக்கு போடுவார்.மக்களுக்கு என்ன அடிப்படை வசதிகள் கிடைக்கும்?!!! பட்டை நாமம் தான்கிடைக்கும்,அந்த சசிகலா &கோ மூஞ்சியை தினமும் பார்க்க முடியுமா நம்மால்?.இப்போது யாரை தேர்வு செய்வதென்றே மக்களுக்கு புரிய வில்லை.இதனாலே மக்களின் வேண்டாவெறுப்பான ஓட்டுக்களின் மூலமே திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என தோன்றுகிறது.

மைதீன் said...

@என்னுடைய எண்ணமும் அதுதான் கார்த்திகேயன். தங்கள் வருகைக்கு நன்றி!

காதர் அலி said...

எல்லா கட்சியிலும் மின் பொருள்களை இலவசமாக கொடுக்கிறார்கள்.நான் t .v .மின்விசிறி,கிரைண்டர் வித்து பொழப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.என் பாடு என்னவாக போகுதோ?

Chitra said...

ஆளும் ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வை என்பதே கிடையாது போல் தெரிகிறது . தன குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை உத்தேசித்து முன்கூட்டியே முடிவெடுக்கும் தலைவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதே இல்லை


......இதை மக்கள் உணர்ந்து வோட்டு போட வேண்டும். மே மாதத்தில் தான் மக்களின் முன்னேற்ற பார்வை எந்த அளவுக்கு உள்ளது என்று தெரிய வரும்.

Rathnavel Natarajan said...

இந்த ஒழுங்கில்லாத மின்வெட்டால் எல்லோர் பிழைப்பும் கெடுகிறது.

உலக சினிமா ரசிகன் said...

இரண்டுமே ஊழல் பேர்வழிகள்.இந்த தடவை யாரிடம் தமிழக மக்கள் ஏமாறப்போகிறார்கள்?????

மைதீன் said...

@வருகைக்கு நன்றி காதர்.
இனிமேல் உங்க பாடு திண்டாட்டம்தான் வேண்டுமானால்,அதை பழுது பார்க்கும் நிறுவனமாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

@வருகைக்கு நன்றி சித்ரா.
மக்கள் உணர்வார்களா? பார்ப்போம்.

@முதல் வருகைக்கு நன்றி ரத்னவேல்.
நீங்கள் கூறுவது மிகச் சரி. வெளி நாட்டு கம்பனிக்கு இருக்கும் மரியாதை நம் தொழிற்சாலைகளுக்கு இல்லை.

@நன்றி உலக சினிமா ரசிகன்.
மாற்றத்திற்கு வழி என்பதே இல்லை போலுள்ளது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மின்சார வெட்டு எல்லோரது பிழைப்பையும் பாழடிக்கிறது. அரசாங்கத்துக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. இலவசத்தை கொடுத்து மக்களை கவர்வதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...