Thursday, March 3, 2011

கதை, வசனம், நடிகர்கள் இல்லாத வித்தியாசமான திரைப்படம்

















BARAKA (1992)



"இயற்கை" இந்த சொல் சாதாரணமானது என்றாலும் இந்த சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்களுக்கு கணக்கில்லை. உலகில் எந்த உயிரினமும் இயற்கையின் நியதிப்படிதான் வாழ்கிறது. மனிதனைத் தவிர,இயற்கையின் நியதிப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இப்பொழுது இயந்திரங்களின் நியதிப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான். இயற்கை அவனுக்கு ஆறாம் அறிவு வழங்கியதால்...மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் இயற்கை காட்சிகளையோ, மீன் தொட்டிகளையோ,அல்லது ,இயற்கை சூழ்ந்த இடங்களில் நாம் நின்று பார்த்தால் இறுக்கம் களைந்து மனம் புத்துணர்ச்சி அடைகிறது. அப்போது புரிந்து விடும் இயற்கை எவ்வளவு முக்கியம் என்று.


இனி நாம் baraka திரைப்படத்தை பார்க்கலாம்.




உலக சினிமா,உலக சினிமா என்று கூறுகிறோம் உண்மையில் இதுதான் உலகசினிமா. ஆறு கண்டங்களில் கிட்ட தட்ட முப்பது நாடுகளை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. படம் உலகத்தை சுற்றி வந்த உணர்வு ஏற்ப்படுத்தினாலும், உண்மையிலே நாம் உலகை சுற்றி வந்தால் கூட இப்படி கோணங்களில் பார்த்திருக்க முடியாது.பயணக்கட்டுரை, டி.வி டாகுமெண்டரி போலல்லாமல் சொல்லப்படும் விதம் புதியது. கதை என்று ஒன்றில்லாவிட்டாலும் கூட மனம் கதை எழுத துவங்கிவிடுகிறது. இசை அதற்க்கு பெரிதும் துணை நிற்கிறது. இசை மட்டும் வைத்து கதை சொல்வது மிக அற்புதம்.





எல்லா நாட்டு மக்களின் வாழ்க்கையின் சகல பரிணாமங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.பனிப் பிரதேசத்தின் குரங்கின் வாழ்விலிருந்து தொடங்கும் காமிரா பயணம் நேபாளம்,இஸ்ரேல்,திபெத் என்று உலகின் அனைத்து நாடுகளிலும் தங்கு தடையில்லாமல் தன் எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டு செல்கிறது.வானம்,கடல்,எரிமலை,நீர்நிலை,நகரம்,வனம் என்று அதன் பயணங்களின் தொலைவு மிக அதிகம்.நாம் பார்க்காத கோணத்தில். ஒரு பறவையைப்போல எந்த தடையும் இல்லாமல்.




காட்சிகள் மாறும்போது காமிரா எந்த கோணம்?, என்னவிதம்? என்று புரிய சில நிமிடங்கள் ஆகும். புரிந்ததும் பிரமிப்பில் வழி விரிகிறது.இந்த உலகம் எவ்வளவு அழகு என்பதை நமக்கு புரிய வைக்கிறது .இந்த அழகான இயற்கையை மனிதன் புரிந்து கொள்ள மறுப்பதையும் காட்டுகிறது. அவ்வளவு பெரிய காட்டில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சரியும் போது நம் மனம் பதறுவதை நம்மால் உணர முடியும்.


"மதம் இல்லையெனில் மனிதர்கள் இல்லை" என்பது போல மனிதர்கள் மதத்தின் உள்ளே முடங்கிக் கிடப்பதை பார்க்க முடிகிறது.இந்து,இஸ்லாம்,கிறிஸ்துவ,பௌத்த மதங்களின் எல்லா புனிதத் தலங்களுக்கும் காமிரா சென்று வருகிறது . அவர்களின் வேண்டுதல்களும்,சடங்குகளும் அவர்களின் பற்றுதல்களும் நமக்கு புரிகிறது.ஆப்ரிக்க பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் இயற்க்கை சார்ந்த வாழ்வும் நமக்கு நிறைய சேதி சொல்கிறது. நகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதும் வருவதும்,எறும்புகள் போல காட்டும் விதம் நீங்கள் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்.

இந்தியாவில் வாரணாசியில் பிணங்கள் எறிவதும், எரிந்து முடியாமலே இருக்கும்போது இன்னொரு பிணம் வந்தததும் அதை தள்ளி விட்டு இதை எரிய வைப்பதும், கங்கை நதியும் ,சடா முடி சாமியார்கள்,நகரங்களின் அன்றாடவாழ்க்கை,போக்குவரத்து நெரிசல்,இயந்திரத்தனமான வாழ்க்கை, பாதையோர கடைகள்,பாலங்கள் என காமிரா தொட்டு செல்லும் இடங்கள் ஏராளம்.


கடைசி பத்து நிமிடங்கள் நம்மை நிறைய யோசிக்க வைக்கிறது . நுகர்வு கலாசாரத்தின் விளைவாக சிகரெட்டு முதல் கம்ப்யூட்டர் பாகம்தயாரிப்பது வரை மனிதர்கள் இயந்திரத்தோடு வேலை செய்து இவர்களும் இயந்திரமாய் மாறிவிட்டதை காட்டுகிறது. மலை போல் குவிக்கப்பட்ட குப்பைகளிடையே கோழிகளைப் போல கிளறி கழிவு பொருட்கள் தேடும் குழந்தைகள்,பெண்கள்,மற்றும் ரோட்டோரத்தில் பசியால் வாடும் ஜீவன்களை பார்க்கும்போது இரண்டு லட்சம் கோடி அடித்தவர்களின் மீது கடும் கோபம் உண்டாக்கும். இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மண்டையோடுகளும்,எழும்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு , அதை துப்பாக்கி தாங்கிய காவலர்கள் பாதுகாப்பதும் ஆயிரம் சங்கதி சொல்லும்.கோழிப் பண்ணையில் குஞ்சுகள் உருவாகும் விதத்தையும், நகரத்தின் மனிதர்களின் வாழ்க்கை நிலையயும் ஒரு சேர காட்டும் காட்சி மிகச் சிறப்பானது.

படத்தின் எந்த ஒரு காட்சியும் நம்மை சந்தோசம் கொள்ளவோ, மகிழ்ச்சிப் படுத்தவோ செய்யாது.நிஜத்தை மட்டுமே உள்ளபடி காட்டும். நாம் பார்த்த,பார்க்காத மனிதர்களையும் ,சூழல்களையும் காட்சிப் படுத்தியிருப்பது இயக்குனரின் திறமையின் வெளிப்பாடு.

96 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் இயக்குனர், ron fricke படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே! படக் குழுவினரின் உழைப்பு எவ்வளவு கடினம் என்பதை பார்க்கும் போதே உணர முடிகிறது. படம் பாருங்கள் பார்த்ததும் உங்களுக்கும் ஒரு பதிவு எழுத தோணும்.








திரைப் படங்களுக்கு மட்டுமல்ல, என் எழுத்துக்கும் விமர்சனங்கள் தேவை.ஆகவே, தங்கள் விமர்சனங்களை இங்கே தந்து என்னை அடையாளம் காட்டுங்கள். நன்றி!!!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

geethappriyan said...

மிக அருமையான படத்தை பற்றிய அறிமுகம்,நான் விரைவில் இதை பார்த்துவிடுகிறேன்,உங்கள் ஆர்வம் மேலும் வளரட்டும்,மேலும் பல படங்கள் அறிமுகம் செய்யுங்கள் நண்பரே.

நண்பரே,ப்ளாக்கர் டேஷ்போரிடில் பதிவுகள் அப்டேட் ஆகாமல் போவது
அது எல்லோருக்குமே நடப்பது தான்,நீங்கள் பதிவுகள் தொடர்ந்து போட்டு வந்தால் தானாய் சரியாகிவிடும்,தவிர இப்போது ப்ளாக்கர் சர்வரில் எதோ கோளாறு உள்ளது,விரைவில் ,சரியாகிவிடும்.

உணவு உலகம் said...

மிக நன்றாக விமரிசனம் செய்துள்ளீர்கள். படத்தை பார்க்க தூண்டும். பகிர்விற்கு நன்றி.

மைதீன் said...

@கார்த்திகேயன் மிகுந்த நன்றி!வருகைக்கும், விளக்கத்திற்கும்

@food
முதல் வருகைக்கு நன்றிகள். அடிக்கடி வருகை தாருங்கள்

சக்தி கல்வி மையம் said...

விமர்சனனம் அருமை..
இனி தொடர்ந்து வருவேன்....

காதர் அலி said...

படம் பார்காமல் பேசுவது நல்ல தன்மை அல்ல.ஆனால்உங்கள் விமர்சனத்தின் மூலம் உலகின் அழிவு பாதையை மனிதர்களுக்கு உணர்த்தியதை நினைத்தால் மனது சந்தோசமாக உள்ளது.

ஆயிஷா said...

விமர்சனம் அருமை.

கலையன்பன் said...

படத்தைப் பற்றிய உங்களின் நீரோட்டமான
விமரிசனம் படிக்க சுவையாய் இருக்கிறது
மட்டுமல்ல ; படம் பார்க்கவும்
தூண்டுவதாகவும்
இருந்தது.!
-கலையன்பன்.

(இது பாடல் பற்றிய தேடல்!)
'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது...)

மைதீன் said...

@ நன்றி கருண் @நன்றி காதர்@நன்றி ஆயிஷா @நன்றி கலையன்பன்

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said...

present

காதர் அலி said...

புரியாத புதிர்ல இதுவும் ஒன்னு அண்ணா

உலக சினிமா ரசிகன் said...

இந்த படம் பார்க்காமல் இது வரை இருந்தது தவறு என உணர வைத்து விட்டீர்கள்.

கோநா said...

பகிர்வுக்கு மிக்க நன்றி மைதீன்.

Related Posts Plugin for WordPress, Blogger...