Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்நித்யானந்தா -ரஞ்சிதா. இன்றைய நாட்களில் பதிவர்களால் அதிகம் விவாதிக்கப் படுபவர்கள். சாமியாராய் இருந்து கொண்டு சல்லாபம் செய்யலாமா ? என்பதுதான் .

இது ஒன்றும் இப்போது புதிதாக நடந்தது இல்லை. இதுபோல் தமிழகம் நிறைய கண்டிருக்கிறது. ஆனாலும்,நம் கூச்சல்கள் அடங்கவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் அரசாங்கம் அது திரும்ப நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வதும், பிறகு அதை மறந்து விடுவதும் பின்பு அதே பிரச்சினை திரும்ப வந்தவுடன் அதே நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வாடிக்கைதான். காவிரி பிரச்சினை முதற்கொண்டு .அந்த மனநிலைமைதான் மக்களிடமும்.

மரணத்தின் மீதான பயம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது. சக மனிதனிடம் புரிதல் இல்லாததினால் அதிக பிரச்சினைகள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் போது சாமியார்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது "குருவி உட்கார பனம் பழம் விழும்" உடனே சாமியார் கடவுளாகிறார். நம் பிரச்சினை தானாக தீர்ந்தாலும் கூட சாமியார்தான் என்று நினைத்து நாம் அவரை பிரபலமாக்குவோம்.

உண்மையிலேயே சாமியார்கள் மக்களை நல்வழிப் படுத்தும் முயற்ச்சியில் இருந்தால் கூட நாம் அவரை புகழ் போதைக்கு அடிமையாக்கி விடுகிறோம்.பண போதைக்கு அடிமையாக்கி விடுகிறோம்.புகழுக்கு மயங்காத மனிதர்களே இல்லை எனலாம்.

பொதுவாக பெண்களோடு அதிகம் தொடர்புடை துறைகள்தான் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றன.இது ஏன் என்று புரியவில்லை?குறிப்பாக கல்வி,சினிமா,மருத்துவம்,ஆன்மிகம் இன்னும் பல. கொலை, கொள்ளை, மோசடி என்று அன்றாடம் குற்றங்கள் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது. நம் மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.ஆனால், சாமி,மதம்,ஜாதி,இன விசயங்களில் தவுறு நடந்தால் கொதித்துப் போகிறார்கள்.மனிதத்திற்கு மட்டும் இங்கு என்றுமே மரியாதையில்லை.


நித்யானந்தாவிடம், கோடிக்கணக்கில் சொத்து உள்ளது என்கிறார்கள். அவரிடம் மட்டுமல்ல நிறைய சாமியார்கள் பணத்தை உபயோகமில்லாமல் வைத்திருக்கிறார்கள் இங்கு,வேலூரில் ஒரு சாமியார் தங்கத்திலே கோவில் கட்டி வைத்திருக்கிறார்.அதனால் நாட்டுக்கு எந்தப்பலனுமில்லை.திருப்பதியில் கணக்கிட முடியாத அளவிற்கு பணம் ,நகை சொத்துக்கள் உள்ளன.அவைகளால் பொது மக்களுக்கு எள்ளளவும் பயனில்லை.மக்கள் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு மனிதன் பசியோடு துடிக்கும்போது மீந்த உணவை சாக்கடையில் வீசி எறிவதுபோல.


கும்பகோணத்தில் தீயில் குழந்தைகள் வெந்த போது கடவுள் மீது எனக்கு வெறுப்பு ஏற்ப்பட்டது. என்ன பாவம் செய்தார்கள். தீயிலா போக வேண்டும் அவர்கள் உயிர். ஒரு துளி நெருப்பு பட்டால் நம் உடல் தாங்குவதில்லை. சதை பொசுங்கும் போது அந்த பிஞ்சுகள் எப்படி கதறியிருப்பார்கள். என்ன கொடுமையிது? இந்த வயதில் அவர்களுக்கு ஏன் இந்த தண்டனை? சாகத்தான் பிறந்தார்களேன்றால்,அவர்களை படைக்காமல் விட்டிருக்கலாமே?

மனிதர்களை நேசியுங்கள்! இயற்கையை நேசியுங்கள் !விட்டுக்கொடுத்து வாழப்பழகுங்கள்! விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போவதில்லை!மனிதர்களை தேடி உதவுங்கள் அப்பொழுதான் நமக்குதேவைப்படும்போது உதவி கேட்காமலே வரும். தேவையில்லாத கூச்சல் போடுவதை விட்டுவிட்டு அமைதியாய் இருங்கள்.அமைதி மனிதனை சிந்திக்க தூண்டும்.

இந்த விசயத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அன்பும், அமைதியும் அவரை உலகத்தின் மத்திக்கு இட்டுச் சென்றது. அந்த புகழ் கூட பாதிக்காமல் அமைதி அவரை காத்து நிற்கிறது.

கடவுள் எப்பொழுதுமே உங்களிடம் காசு எதிர் பார்ப்பதில்லை. அதை கோவிலில் கொட்டாமல் தேவைப் படும் மனிதனுக்கு உதவி செய்யுங்கள். அவனுக்கு அந்த இடத்தில் நீங்கள்தான் கடவுள்.

ஓடி ஓடி உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும், அன்பை நாளும் விதைக்கணும். அற்புதமான வரிகள்.அனுபவித்து பாருங்கள் .


இப்படித்தான் எதையோ சொல்ல நினைத்து எங்கோ முடிகிறது என் எண்ணங்கள்.


இதுவரை பொறுமையாக படித்த என் நண்பர்களுக்கு நன்றி! பின்னூட்டமும்,ஓட்டும் தந்து எனக்கு உறுதுணையாய் இருங்கள்.
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

அபுஅஃப்ஸர் said...

எழுதும் உங்களுக்கும் படிக்கும் நமக்கும் புரிகிறது இந்த சா க்களின் அட்டூழியம், காசைக் காலடியில் கொட்டி நீதான் என் கடவுள் என்று சொல்லும் படித்த பாமரமக்களுக்கு எங்கே தெரியப்போகிறது இந்த புலம்பல்கள் மைதீன்

நல்ல அலசல்... தொடருங்க‌

அபுஅஃப்ஸர் said...

கமெண்ட்லே வேர்ட் வெரிஃபிகேசன் எடுத்துவிடுங்க, நிறைய கமெண்ட் வர சான்ஸ் இருக்கு

Anonymous said...

பெரியார்தாசன்
தாசன் இந்தப் பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?

கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!

ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...

எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?

நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்?

இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?

பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?

போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?
5:56 AM | Category: |

மைதீன் said...

ஆன்மீகத்தை பொறுத்தவரை சேனை கட்டிய குதிரையாக ஒரே திக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள். இதில் மட்டும் ஆறாவது அறிவை உபோயோகப் படுத்துவதே இல்லை.நன்றி அபு அஃப்சர்.

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பா மைதீன், உங்கள் புகழ் ஓங்குக, தொடரட்டும் உங்கள் சேவை

ஸ்ரீராம். said...

மனிதன் மேல் மனிதனுக்கு இருக்கும் பொறாமை. கடவுள் கூட நேரில் வந்து விட்டால் அவன் மதிப்பும் அழிந்து போகும். அறியாத பல விஷயங்களில் அறியாமையும், பயமும்தான் செலுத்துகின்றன.

மைதீன் said...

@நன்றி சசி!

@வருகைக்கு நன்றிஸ்ரீராம். அந்த காலத்தில் மனிதன் மிருகங்களுக்கு பயந்து பாதுகாப்புகள் செய்தான். இன்று மனிதனைக் கண்டே மனிதன் பயப்படுகிறான்.

thenammailakshmanan said...

மிகுந்த ஆதங்கம் உங்கள் பதிவில் வெளிப்பட்டது மைதீன் .. பகிர்வுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி

கண்ணா.. said...

மைதீன் அண்ணே...

பிரிச்சு மேய்ஞ்சுருக்கீங்க.................


அருமை

மைதீன் said...

@நன்றி தேனம்மை அவர்களே, அடிக்கடி வந்து போகவும்.

@நன்றி கண்ணா.உங்கள் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும்.

அன்புடன் மலிக்கா said...

தெளிவான கட்டுரை.

மனிதரை மனிதராய் பார்க்கத்தவறும்போது இதுபோன்ற பாவங்கள் அரங்கேறுகிறது..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பர் மைதீன்
ஏன் எழுதுவதில்லை,இனி இதுபோல தொடர்ந்து எழுதுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...