Monday, February 22, 2010

குழந்தைகளை கவனிப்போம்!

இந்தப்பூமியில் நாம் பிறந்ததன் நோக்கம், இங்கு நமக்குள்ள வேலை என்னவென்று சிந்தித்தால்?

ஒரு நல்ல சந்ததியை உருவாக்குவதுதான். அதன் பொருட்டே உணவுதேடல்,பணத்தேடல் இன்னும்பிற. மற்ற உயிரினங்களின் வேலையும் அதுதான் என்றாலும், நாம் அதிலிருந்து வேறுபட்டு நிற்கிறோம்.

நம் குழந்தைகளுக்கு பணம், சொத்து மட்டும் சேர்த்து வைத்தால் போதும் என்று நினைப்பது, சுதந்திரமாய் திரியும் பறவைகளை கூண்டிலடைத்து வளர்த்து பெருமைப்படுவது போல். அவைகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்று அவசியமில்லை கூண்டை திறந்தாலே போதும் தனக்கான உணவை அது தேடிக்கொள்ளும். அதுபோல் நாமும் பிள்ளைகளுக்கு இறக்கைகள் வளரவிடாமல் தங்க கூண்டுகள் செய்துகொண்டிருக்கிறோம்.

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
என்கிறார் திருவள்ளுவர். ஆனால், நாம் கேட்கிறோமா என்றால் கேள்விக்குறிதான் .

பிள்ளைகளின் கேள்விகளை செவிமடுத்துக் கேட்டு,அதற்க்கு பதலளித்தால் அவர்களுக்கு வாழ்க்கை புரிந்துவிடும்.நாம் கவனிக்காது போனால் அந்த கேள்வி வேறிடத்தில் கேட்கப்பட்டு பதில் திரித்து கூறப்பட்டால், அவர்கள் தவறு அங்கிருந்து ஆரம்பமாகும்.ஒரு நல்ல சந்ததியை உருவாக்க நாம் பல நிலைகளை அவர்களோடு கடக்க வேண்டும்.தந்தையாக,ஆசிரியராக,நல்ல தோழனாக இப்படி பல நிலை.

என் சிறு வயதில் பள்ளியில் தர அட்டையை(ரேங்க் கார்டு) கொடுத்து பெற்றோரின் கையொப்பம் வாங்கி வரச் சொல்வார்கள். மதிப்பெண் குறைந்த என் சக நண்பர்கள் வீட்டுக்கு செல்ல பயப்படுவார்கள் "என் அப்பா அடி கொன்றுவிடுவார்,என் அம்மா சூடு வைப்பார்"என்று கூறி வீட்டை விட்டு ஓடிவிடுவேன் என்று கூட சொல்வார்கள் .ஆனால்,பாடங்களை விட சில கலைகளில்,விளையாட்டுகளில் அவர்கள் வல்லவர்கள்.அதை ஊக்கப்படுத்தியிருந்தால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமயிருந்திருக்கும்.

பள்ளிகளின் தரவரிசை அட்டையை மட்டுமே வைத்து மதிப்பிடக்கூடாது. ஒன்று அவர்களின் குறைகளை போக்க முயற்ச்சிக்க வேண்டும்.அல்லது,விருப்பமான துறைகளில் ஊக்கப்படுத்தவேண்டும். நம்முடைய கனவுகளை கண்டிப்பாக திணிக்க நினைத்தால், நம்மை விட்டு விலகிப்போய்விடுவார்கள்.

வாடிக்கையாளர்களையும்,மேலதிகாரிகளையும் திருப்திப்படுத்த சிரமங்களை மேற்கொள்ளும் நாம், பிள்ளைகளுக்காகவும் விட்டுக்கொடுத்துப் பழக வேண்டும்.
திரைப்படங்களுக்கும்,தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் பிள்ளைகளை கவனிக்க மறந்து விடுகிறோம்.

இந்த காலத்தில் குழந்தைகளுக்கு சுமை அதிகம்.பதினைந்து மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கிறார்கள்.அவர்களைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது.நாம் அனுபவித்த விளையாட்டுக்கள்,சுதந்திரம், உறவுகள் இன்று அவர்களுக்கு இல்லை ஆரோக்கியம் உட்பட .குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடவேண்டும் பொதி சுமக்கும் கழுதைகளாக அல்ல.

மனித வாழ்வு அற்புதமானது அதை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .வீண் சண்டைகளை மனைவிடமோ,பிள்ளைகளிடமோ, மற்றவரிடமோ போட்டுக்கொண்டிருப்பதை விட வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.குழந்தைகளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பிள்ளைகள் நம் பிரதிகள் அதை அழகாக செதுக்கவேண்டும. சிதைத்து விடக்கூடாது .ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவைகளை நம்மால் சரி செய்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருந்தால் நம் குழந்தைகளுக்கும் அது தொற்றி அவர்களால் எந்த சூழலையும் சமாளித்து வெற்றி பெற முடியும்.

தியாகங்கள்தான் வாழ்க்கை, தியாகத்தால் பிறந்தது நம் தேசம்.நம் தியாகம் நம் பிள்ளைகளை நெறிப்படுத்தும்.தங்க கூண்டுகளை ஏற்ப்படுத்தாமல் சிறகுகள் வளர்வதை வரவேற்ப்போம்.

என் எழுத்து தேர்ந்த எழுத்தாளரைப் போல் இல்லாமலிருக்கலாம்.இதைப் பொறுமையாக படித்த நண்பர்களுக்கு என் நன்றி! என் சிறகுகள் வளர்ந்து கொண்டிருக்கிறது நானும் ஒருநாள் வானில் உயர பறப்பேன் என்ற நம்பிக்கையுடன்...
பின்னூட்டமும் ,ஓட்டும் தந்து என் சிறகுகளுக்கு வளர்ச்சி ஏற்படுத்துங்கள் .
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

அது ஒரு கனாக் காலம் said...

அழகாக உள்ளது உங்கள் பதிவு , கருத்துக்கள் ஆழமாகவும் உள்ளது..... வாழ்த்துக்கள்.

sundar

மைதீன் said...

சுந்தரம் ஐயா,தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

அன்புடன் மலிக்கா said...

பயனுள்ள பதிவு, குழந்தைகளை குழைந்தைகளாக கவனியுங்கள். சரியான செய்தி..
வாழ்த்துக்கள்..

[இதில் சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்கள் அப்போதுதான் நிறைய வாசகர்கள் வருவர்கள் அவர்களூக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்,,]

Anonymous said...

மனதின் வளர்ச்சி மனிதனின் வளர்ச்சி ..... தங்களின் பாணியில் ஒரு கல்வி பிள்ளைகளுக்கு அல்ல பெற்றோர்களுக்கு....

Chitra said...

பிள்ளைகளுக்கு இறக்கைகள் வளரவிடாமல் தங்க கூண்டுகள் செய்துகொண்டிருக்கிறோம்.

சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக யோசித்து எழுதிய பதிவு.

Chitra said...

neenga "followers" set pannaliyaa?
padhivu pottuttu link anuppunga.
endrum vatraatha jeevanadhi karaiyila padichchittu, ippo vatri pona aatrankaraiyil irukkeenga pola.
CMC???

மைதீன் said...

வருகைக்கு நன்றி மலிக்கா,நான் பதிவுலகுக்கு மட்டும் புதுசு அல்ல, கம்ப்யுட்டரே எனக்கு புதுசு அதனால் நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.நன்றி!!

மைதீன் said...

வாங்க சித்ரா உங்கள் வருகைக்கு நன்றி! பின் தொடர்பவர்கள் பகுதி இணைத்து விட்டேன்.அடிக்கடி வந்து போகவும்.

வேலன். said...

சாரி...மைதீன் கொஞ்சம் லேட்டாயிடுச்சு..அருமையாக இருக்கு பதிவு..பதிவின்படி நானும் குழந்தைகளை நேசிக்க ஆரம்பிக்கின்றேன்.(வேலூர் எனக்கு நல்ல அத்துப்படி)வாழ்க வளமுடன்,வேலன்.

அபுஅஃப்ஸர் said...

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனிகலை, அந்த வளர்ப்பில்தான் அதன் எதிர்காலமும் இருக்கு

நல்ல பதிவு மைதீன்

goma said...

பள்ளிகளில் சுற்றறிக்கையாக இந்த பதிவை அனுப்பி வைக்கலாம்

சசிகுமார் said...

என் மனதில் உள்ள ஏக்கத்தை இந்த பதிவில் அப்படியே தெரிவித்து உள்ளீர்கள் உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மைதீன் said...

@ வருகைக்கு நன்றி வேலன், குழந்தையின் படம் வைத்திருக்கிறீர்கள் அதிலே தெரிகிறது. நீங்கள் நேசிப்பது. உங்கள் பிள்ளை பெரும், புகழும் பற்ற என் வாழ்த்துக்கள்.

@ அபு அஃப்சர் நீங்க சொல்வது மிகச்சரி அந்த கலையை நாம் நேசிப்புடன் செய்ய வேண்டும்.வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

@ நன்றிசகோதரி கோமா, கோமா என்றால் கோமதி என்றுதான் இருக்க வேண்டும்.நெல்லைப்பகுதியில் இந்தப் பெயர் பிரபலம் .ஆணிற்கு கூட வைப்பார்கள்.அடிக்கடி வருகை தரவும்.

மைதீன் said...

நன்றி சசி, உங்கள் ஊக்கம் என்னை மேலும் உற்சாகப் படுத்தும் .

goma said...

நீங்கள் யூகித்தது சரிதான்.நான் திருநெல்வேலி தமிழச்சி,தாமிரபரணி தங்கச்சி,

மோகன் குமார் said...

நல்ல பதிவு மைதீன். உண்மையை தான் எழுதி உள்ளீர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...