Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் -அழிவின் பதிவு


இந்த படத்தை நம் பதிவர்கள் அதிகம் அலசி ஆராய்ந்துவிட்டனர் . ஆனால் என் வேலை அதுவல்ல ,இந்த படம் அதிலுள்ள தமிழ் .

நம் தமிழ் எவ்வளவு வார்த்தைகளை இழந்து விட்டது [நாம் அழித்து சிதைத்து விட்டிருக்கிறோம் ] என்பதை உணரவைத்தது .இவையெல்லாம் நாம் ஏற்கெனெவே அறிந்தவைதான் என்றாலும் திரைப்படம் என்ற ஊடகத்தின் மூலம் அது இன்னும் உணர்வுபூர்வமாக சிந்திக்கசெய்கிறது .

தமிழ் என்ற வார்த்தைமட்டுமே இனி தமிழில் இருக்கும் என்ற நிலை வந்தாலும் ஆச்சிரியப்படுவதர்க்கில்லை.

எங்கள் வீட்டு குழந்தை தமிழில் 20 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசையில் பின் தங்கியது .வினவியபோது "தமிழ் மட்டும் இல்லையென்றால் நான் முதலிடத்தில் இருப்பேன் "என்ற பதிலில் தமிழனாகிய எனக்கு பூமி பிளந்தது .

இந்த அவசரயுகத்தில் பொருளாதார யுத்தத்தில் இதைப்பற்றி சிந்திக்கவே நமக்கு நேரமில்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை .

உலகம் முழுவதும் தமிழினம் மட்டுமே பரவியிருக்கிறது .தமிழ் மொழி கேள்விக்குறியோடு நிற்கிறது .


வேற்று மொழி தொலைக்காட்சிகளும் ,திரைப்படங்களும் ,தமிழ் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது , நம் நடிகர்களும் ,நடிகைகளும் ,தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் ,வேற்று மொழி கலந்து பேசும்போது,

நான் என்னத்த சொல்ல ...

இந்தவேளையில் திரைப்படங்களுக்கும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ,நடிக ,நடிகையர்க்கும்தான் தமிழ் மக்களிடம் அதீத ஈர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதும் இவைகள்தான் .


இதைபுரிந்துகொண்டு தமிழ் திரைப்படங்களும் ,தொலைக்காட்சிகளும் ,பத்த்ரிக்கைகளும் ,அதை சார்ந்த கலைஞர்களும், அவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுத்துகொண்டிருக்கும் தமிழை ,உண்மையான தமிழை சிதைக்காமல் இருந்தால் தமிழ் நீண்ட நெடும்காலம் வாழும் என்பது என் தாழ்மையான கருத்து .

முடிந்தால் தமிழ் அறிஞர்களின் உதவியுடன் தமிழின் அழிந்த சொற்களை மீட்டெடுத்து, மக்களிடம் அவர்கள் சேர்க்கவும் முடியும் .

இந்த உணர்வுகளை ஊட்டிய செல்வராகவனுக்கு என் நன்றி !!!

மேலும், ஆயிரத்தில் ஒருவனில் ,சில குறைகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய திரைப்படமே !
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

NAZAR said...

sariya sollappattullathu

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

super maideen and thanks

வேலன். said...

அருமையாக இருக்கு நண்பரே...
தொடரட்டும் உங்கள் பணி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

NAZAR said...

super

NAZAR said...

ஆறுமை தொடரட்டும் உங்கள் பணி

மதார் said...

மிக சரியாய் சொன்னிர்கள் , நேற்றுதான் நானும் என் பிரெண்ட்ஸ் கூட இந்த படம் பார்த்தேன் , நா ஏற்க்கனவே பல கல்கி நாவல்கள் படித்துள்ளதால் எனக்கு படமும் , அதில் வந்த தமிழ் வசனங்களும் புரிந்தன . என் பிரெண்ட்ஸ் யாருக்கும் ரீமாசென் பேசிய வசனங்கள் ஒன்று கூட புரியவில்லை , படமும் சேர்த்து . படம் முடிந்த பிறகு ஒரு அரை மணி நேரம் நான் புரிய வைத்த பிறகே அவர்களுக்கு படம் முழுவதும் புரிந்தது . என்ன கொடும இது ? இதற்கும் மேல் ஏதாவதொன்று தமிழில் சொல்லி அவர்களுக்கு புரியவில்லை என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் கொடுமையும் நடக்கிறது . தமிழ் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...